Manish Sisodia: டெல்லி துணை முதல்வர் மணி்ஷ் ஷிசோடியா மீது விசாரணை: சிபிஐ-க்கு உள்துறை அமைச்சகம் பச்சைக்கொடி
எதிர்க்கட்சிகளை சிறப்பு பிரிவு மூலம் உளவுபார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் ஷிசோடியா மீது விசாரணை நடத்த சிபிஐக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
எதிர்க்கட்சிகளை சிறப்பு பிரிவு (FBU)மூலம் உளவுபார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் ஷிசோடியா மீது விசாரணை நடத்த சிபிஐக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
டெல்லி மதுபான பார்களுக்கு உரிமம் வழங்கிய வழக்கில் ஏற்கெனவே மணிஷ் ஷிசோடியா சிபிஐ விசாரணையை எதிர்கொண்டுவரும் நிலையில் தற்போது, இந்த வழக்கிலும் சிபிஐ விசாரணையைச் சந்திக்க உள்ளார்.
1988, ஊழல்தடுப்புச் சட்டம் பிரிவு 17-ன் கீழ் மணிஷ் ஷிசோடியா மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்து விசாரிக்கலாம் என்று டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
பிரதமர் மோடியின் மருமகளிடம் கைவரிசை காட்டியவர் கைது
டெல்லி துணை முதல்வர் ஷிசோடியா, மாநில லஞ்சஒழிப்புத் துறையில் ஒரு தனிப்பிரிவை 2015ம் ஆண்டு உருவாக்கி, அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், தனிநபர்கள், நிறுவனங்களை உளவுபார்க்கப் பயன்படுத்தினார் என்று புகார் எழுந்தது.
இது குறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில் “ இந்த உளவுப்பிரிவுக்கு எந்தவிதமான சட்டப்பாதுகாப்பும், நீதிமன்ற அனுமதியும் இல்லை. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆலோசகர்கள், நெருக்கமானவர்களால் இந்த உளவுப்பிரிவு உருவாக்கப்பட்டு உளவுபார்க்கப்பட்டது. இந்த உளவுப்பிரிவுக்கு ரகசியமாக அரசின் பணமும் செலவிடப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவே மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது” எனத் தெரிவிக்கின்றன.
சிபிஐ அறிக்கையைத் தொடர்ந்து, இந்த அறிக்கையை டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா, உள்துறை அமைச்சகத்தின் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். அந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐக்கு உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
இதென்ன இங்கிலாந்தா! இங்கிலீஸ்ல பேசுறீங்க! விவசாயியை கடிந்து கொண்ட நிதிஷ் குமார்
இந்த உளவுப்பிரிவை உருவாக்க கடந்த 2015ம்ஆண்டு ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முதல்வருமான கெஜ்ரிவால் அமைச்சரவையில் முன்வரைவு தாக்கல் செய்தார் ஆனால் குறித்த எந்த தகவலும்இல்லை. இந்த உளவுப்பிரிவில் அதிகாரிகள் நியமனத்துக்கும் ஆளுநரிடம் இருந்து எந்த ஒப்புதலும் பெறப்படவில்லை என்று சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
டெல்லி லஞ்ச ஒழிப்புத்துறையின் பரிந்துரையின் அடிப்படையில், உளவுப்பிரிவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் அளித்ததால், சிபிஐ முதல்கட்டவிசாரணை நடத்தியுள்ளது.