Chidambaram: இந்துத்துவா,இந்தித் திணிப்பு மட்டும் பட்டினியைப் போக்கிவிடுமா?பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா 107வது இடத்துக்கு சரிந்துள்ளது, எப்போது தான் பிரதமர் மோடி உண்மையான பிரச்சினைகளைப் பற்றிப் பேசப் போகிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Hindutva , imposing HIndi and spreading Hate are not the antidote to Hunger: P Chidambaram

உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா 107வது இடத்துக்கு சரிந்துள்ளது, எப்போது தான் பிரதமர் மோடி உண்மையான பிரச்சினைகளைப் பற்றிப் பேசப் போகிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

உலக பட்டினிக் குறியீட்டில் 121 நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா 107வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 106 நாடுகளில் 101வது இடத்தில் இருந்தது. 2020ம் ஆண்டில் 94வது இடத்தில் இருந்தது. 

தெற்காசியாவில் உள்ள நாடுகளில் போர்சூழல் நிலவும் ஆப்கானிஸ்தானைத் தவிர்த்துப் பார்த்தால், இந்தியாதான் கடைசி இடத்தில் இருக்கிறது. அந்த வகையில் தீவிரமான பிரிவு(சீரியஸ்)  பட்டியலில் இந்தியா 29.1 மதிப்பெண்களுடன் உள்ளது.

‘மயிலாப்பூரில் சுண்டைக்காய் விலை கேட்டா தீர்வு வராது’ - நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த ப.சிதம்பரம்

 இலங்கை (64வது) , நேபாளம் (81), வங்கதேசம் (84), பாகிஸ்தான் (99), நேபாளம் (81), மியான்மர் (84)  ஆகிய நாடுகளைவிட இந்தியா பின்தங்கி 107வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் 109வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தானைத் தவிர்த்துப் பார்த்தால் தெற்காசியாவில் இந்தியாதான் மோசமான இடத்தில் உள்ளது.

 குழந்தைகள் உயரத்துக்கு ஏற்றார்போல் எடை இல்லாமல் இருக்கும் சைல்ட் வேஸ்டிங்கிலும், இந்தியா 19.3% பெற்று மோசமான நிலையில் இருக்கிறது. கடந்த 2014ம் ஆண்டில் 15.1 சதவீதம் இருந்தநிலையில், 2020ம் ஆண்டில் 17.15% இருந்தநிலையில் அதைவிட மோசமடைந்துள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 'ஆப்ரேஷனே' நடக்குதுனுகூட சொல்லுங்க? ப.சிதம்பரம் கிண்டல்

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில் “ மதிப்பிற்குரிய பிரதமர் மோடி, எப்போது உண்மையான பிரச்சினைகளான குழந்தைகளுக்கான சரிவிகித சத்துக்குறைபாடு, பட்டினி, குழந்தைகளின் சீரற்ற வளர்ச்சி, எடைகுறைவு ஆகியவற்றைப் பற்றி பேசப் போகிறார்? 22.4 கோடி மக்கள் இந்தியாவில்,  சத்துணவுக் குறைபாட்டால் இருக்கிறார்கள்.

முத்ரா திட்டம் பயனற்றது! ரூ.3.73 லட்சத்தில் எத்தனை பேருக்கு வேலை கொடுப்பிங்க? ப.சிதம்பரம் கேள்வி

19.3% குழந்தைகள் தங்கள் உயரத்துக்கு ஏற்ற எடையில் இல்லை, 35.5 சதவீத குழந்தைகள் போதுமான எடையில்லை. இந்துத்துவா, இந்தித் திணிப்பு, வெறுப்பைத் திணித்தல் மட்டும் பட்டினியைப் போக்கிவிடுமா.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2014ம் ஆண்டோடு ஒப்பிடும்போது, மோடிஅரசின் 8 ஆண்டு ஆட்சி மோசமாக இருக்கிறது. இந்தியர்களில் 16.3 சதவீதம் பேர் சத்துணவுக்குறைபாட்டால் உள்ளனர். இதன் அர்த்தம் போதுமான உணவு இல்லை” எனத் தெரிவித்தார்

எல்லாத்தையும் வாங்கி,வாக்காளர்களை மொத்த வியாபாரி கிண்டல் செய்வார் அப்போ பாருங்க!ப.சிதம்பரம் தாக்கு

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ 5 லட்சம் டாலர் பொருளாதாரம் பற்றி பாஜக பேசுகிறது. ஆனால் 106 நாடுகள் நம்மை விட தங்கள்நாட்டு மக்களுக்கு தினசரி 2 வேளை உணவு வழங்குகின்றன. ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல கல்வி வழங்காமல் இந்தியா முதலிடத்துக்கு வர முடியாது” என விமர்சித்துள்ளார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில் “ மோடி அரசு இந்தியாவுக்கு பேரழிவு. 8.5 ஆண்டுகள் நாட்டை ஆண்டதற்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும். இதுஇருள் சகாப்தம்” எனத் தெரிவித்துள்ளார்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios