Asianet News TamilAsianet News Tamil

அபுதாபியில் முதல் இந்துக்கோயில்! பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Hindu temple in Abu Dhabi Prime Minister Narendra Modi has laid the foundation stone
Hindu temple in Abu Dhabi Prime Minister Narendra Modi has laid the foundation stone
Author
First Published Feb 11, 2018, 2:49 PM IST

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்து கோயில் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டினார். அபுதாபியில் கட்டப்பட முதல் இந்து கோயில் இதுவாகும்.

பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டான், பாலஸ்தீனத்தை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ளார். அங்கு அபுதாபி இளவரசர் அல் நெஹாயானுடன் இரு தரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், ரயில்வே, எரிசக்தி, நிதி உள்ளிட்ட துறைகளில் இளவரசருடன் 5 ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார். 

Hindu temple in Abu Dhabi Prime Minister Narendra Modi has laid the foundation stone

கடந்த 2015 ஆம் ஆண்டு, பிரதமர் மோடி துபாய் சென்றிருந்தபோது, அங்குள்ள இந்துக்களின் வழிபாட்டுக்காக கோயில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோயில் கட்ட அமீரக அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.

கோயிலின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சுவாமி நாராயண் அமைப்புக்கு 25 ஆயிரம் சதுர அடி நிலத்தை, ஐக்கிய அமீரக அரசு வழங்கியது.

Hindu temple in Abu Dhabi Prime Minister Narendra Modi has laid the foundation stone

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, கோயிலுக்கான கட்டுமான பணிகளை இன்று தொடங்கி வைத்தார். அபுதாபியில் கட்டப்படும் முதல் இந்து கோயில் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததா

Follow Us:
Download App:
  • android
  • ios