Asianet News TamilAsianet News Tamil

அமேசான் நிறுவனத்தில் மீண்டும் இந்து கடவுள்களை அவமதிக்கும் பொருட்கள் … கொந்தளித்த இந்தியர்கள் !!

இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையிலான பொருட்கள் அமேசான் நிறுவனத்தின் இணைய விற்பனையில் இடம் பெற்றுள்ளதையடுத்து இந்தியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

hindu god  pictures in door mate oppose indians
Author
Delhi, First Published May 17, 2019, 8:18 PM IST

உலகின் மிகப்பெரிய ஆன்-லைன் வர்த்தக இணையதளமான அமேசான் தன்னுடைய இணையதளத்தில் இந்து கடவுள்களை அவமதிப்பு செய்யும் வகையிலான பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளது. 

இந்து கடவுள்கள் சிவன், விநாயகர்களின் புகைப்படம் டாய்லெட் கவரிலும், காலில் போட்டு மிதிக்கும்  டோர் மேட்களிலும் இடம்பெற்றுள்ளன. இதே போன்று மகாத்மா காந்தியின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

hindu god  pictures in door mate oppose indians

இவ்வகையான பொருட்கள் இந்தியாவில் இதுவரை விற்பனைக்கு வரவில்லை. ஆனால் இணையதளத்தின் அமெரிக்க பிரிவில் இதுபோன்ற பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இது இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து டுவிட்டரில் அமேசான் இணையதளத்திற்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. . #BoycottAmazon  என்ற ஹேஷ்டேக்குகளுடன் இந்தியர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். 

மேலும் அமேசானுக்கு எதிரான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருகிறது.  

hindu god  pictures in door mate oppose indians

ஏற்கனவே  2017-ம் ஆண்டும் இதுபோன்ற ஒரு சம்பவம் அமேசான் இணையதளத்தில் நடந்தது. அப்போது வெளியுறவுத்துறை  அமைச்சர்  சுஷ்மா சுவராஜ் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார். 

அமேசான் ஊழியர்களுக்கு விசா வழங்கப்பட மாட்டாது எனவும் எச்சரிக்கையை விடுத்தார். இதனையடுத்து இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையிலான பொருட்கள் அமேசானிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது. இப்போது அமேசானிடம் இருந்து பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios