இந்து பெண்களை தொட்டால் கையை வெட்டு... மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு!

இந்து பெண்ணை எவராது தொட்டால், அவரது கைகளை வெட்டுங்கள் என்று மத்திய இணை அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Hindu Girls Remark, Ananth Kumar Hegde

இந்து பெண்ணை எவராது தொட்டால், அவரது கைகளை வெட்டுங்கள் என்று மத்திய இணை அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவரது பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

மத்திய திறன் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக இருக்கும் அனந்த்குமார் ஹெக்டே, கர்நாடக மாநில குடகு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார். அப்போது சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த பெண்கள், குடகில் மறைந்திருப்பதாக தகவல் வந்துள்ளது. அத்தகைய தேச துரோகிகளுக்கு இங்கு இடம் தரக்கூடாது. அவர்கள் இங்கு வந்தால், மண்ணோடு மண்ணாக்குங்கள். Hindu Girls Remark, Ananth Kumar Hegde

மேலும் இந்து பெண்கள் உடல் மீது யாராவது கை வைத்தால் அவர்களின் கைகள் உடலில் ஒட்டியிருக்காத வகையில் வெட்டி விடுங்கள் என்றும் அவர் ஆணையிட்டார். அனந்தகுமாரின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Hindu Girls Remark, Ananth Kumar Hegde

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உக்ரப்பா எம்.பி. கூறுகையில், அனந்தகுமார் ஹெக்டே கூறிய கருத்து தவறானது. அவரை அமைச்சரவையில் இருந்து உடனே பிரதமர் நீக்க வேண்டும் என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios