நாடு முழுவதும் சுமார் 400க்கும் மேற்பட்ட சுங்கசாவடிகள் உள்ளன. ஆண்டுக்கு இரு முறை கட்டண உயர்வை உயர்த்தி வரும் சுங்கசாவடிகளால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் 170 க்கும் மேற்பட்ட சுங்கசாவடிகளில் நள்ளிரவு முதல் 5சதவீதம் கட்டணத்தை உயர்த்திஉள்ளது. தமிழகத்தில் மட்டும் 42 சுங்கசாவடிகளில் 20 சுங்கசாவடிகள் திடீரென கட்டணத்தை உயர்த்தியுள்ளன. இதற்கு லாரி உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே லாரி தொழில் நசிந்து வரும் நிலையில் தற்போது சுங்கசாவடி கட்டணம் உயர்வால் வாடகை உயத்தப்படுவதுடன், அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகப்படுத்தப்பட்ட சுங்க கட்ணத்தை திருப்ப பெற வில்லை எனில் வரும் 20 தேதி முதல் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட போவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சங்கம் தெரிவித்துள்ளது.