Asianet News TamilAsianet News Tamil

மாதம் ரூ.2000 வேணுமா..? உடனே இதை பண்ணுங்க..? மத்திய அரசு 'அதிரடி' அறிவிப்பு !

பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2000 பெற என்ன செய்ய வேண்டும் என்று இதில் பார்க்கலாம்.

Here is what you need to do to get Rs 2000 per month under the Prime Ministers Agricultural Assistance Scheme
Author
India, First Published Jan 9, 2022, 6:52 AM IST

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2,000 என இந்தப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த நிதியானது மத்திய அரசிடமிருந்து நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். 

Here is what you need to do to get Rs 2000 per month under the Prime Ministers Agricultural Assistance Scheme

கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதேநேரம், நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றோர் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை.

Here is what you need to do to get Rs 2000 per month under the Prime Ministers Agricultural Assistance Scheme

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விரும்பும் விவசாயிகள் முதலில் மாநில அரசு அல்லது உள்ளூர் வருவாய் அதிகாரி பரிந்துரைத்த நோடல் அதிகாரியை அணுக வேண்டும். பொதுச் சேவை மையங்களில் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளை பதிவு செய்து இத்திட்டத்தில் பயன்பெறலாம்.  பிஎம் கிசான் வெப்சைட்டிலும் விவசாயிகள் நேரடியாக இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய ஆதார் அட்டை கட்டாயமாகும். குடியுரிமை சான்றிதழ், நில உரிமையாளரின் ஆவணங்கள் மற்றும் ஜன தன் வங்கி கணக்கு விவரங்கள் தேவைப்படும். ஆன்லைன் விண்ணப்பத்தின் போது, பிரதமர் கிசான் வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டலில் ’farmers corner’ என்ற ஒரு பிரிவு உள்ளது . இந்த போர்டல் மூலம் விவசாயிகள் தங்களை பதிவு செய்ய வேண்டும். அவர்கள் தங்களது பெயரைத் திருத்தம் செய்ய இந்த போர்ட்டலையும் பயன்படுத்தலாம். 

Here is what you need to do to get Rs 2000 per month under the Prime Ministers Agricultural Assistance Scheme

நிதியுதவியின் தற்போதைய நிலை குறித்த தகவல்களையும் இந்தப் பக்கத்தில் விவசாயிகள் தெரிந்துகொள்ளலாம்.பிஎம் கிசான் திட்டத்தில் தகுதியுடைய விவசாயிகளுக்கு நிதியுதவி வராவிட்டால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக டோல் ஃபிரீ நம்பர்களும் உள்ளன. அதில் விவசாயிகள் புகார் கொடுக்கலாம். பிஎம் கிசான் டோல் ஃபிரீ நம்பர்: 18001155266 , பிஎம் கிசான் ஹெல்ப்லைன் நம்பர்: 155261, லேண்ட் லைன் நம்பர்கள்: 011—23381092, 23382401, பிஎம் கிசான் நியூ ஹெல்ப்லைன்: 011-24300606, மற்றொரு ஹெல்ப்லைன்: 0120-6025109 . மேற்கண்ட இந்த  எண்களில் விவசாயிகள் புகார் கொடுக்கலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios