hennai to bangalore express train 300 km speed
மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய 450கி.மீ தொலைவுள்ள சென்னை, பெங்களூரு, மைசூரு ரெயில்பாதைத் திட்டத்துக்கான செயலாக்க ஆய்வை ஜெர்மனி ஆய்வு செய்ய உள்ளது.
தென் மாநிலங்களில் செய்யக்கூடிய இந்த செயலாக்க ஆய்வுக்காக பொறியாளர்கள், ஆலோசனையாளர்கள் குழுவை ஜெர்மனி அமைத்துள்ளது. ஏறக்குறைய ஒரு ஆண்டு வரை நடக்கும் இந்த ஆய்வில் ரெயில் நிலையம் அமையும் இடம், திட்டத்துக்கான சாவல்கள், ரெயில் வேகம், இருப்புபாதை, உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. இதற்கான செலவு அனைத்தையும் ஜெர்மனியே ஏற்க உள்ளது.
இந்த திட்டம் செயல்படுத்த சாத்தியம் இருக்கிறதா? என்பது குறித்து கடந்த ஆண்டு ஆய்வு செய்யப்பட்டு முடிக்கப்பட்டது. அதில் மனநிறைவு அடைந்ததையடுத்து, ஜெர்மனி அரசு, இப்போது, ரெயில் திட்டத்தை செயலாக்க ஆய்வுக்கான பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெர்மனியின் ரெயில்வே மற்றும் டிஜிட்டல் போக்குவரத்து துறையோடு, இந்திய ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் கூட்டாக இணைந்து அதிவேக ரெயில் பாதையை அமைக்க உள்ளன.
மேலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெர்மனி சென்ற மத்திய ரெயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, ஜெர்மனி ரெயில்வே துறை அமைச்சருடன் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் இந்தியா வந்தஜெர்மனி ரெயில்வே அமைச்சர் அலெக்சான்டர், அமைச்சர் சுரேஷ் பிரபுடன் ஆலோசனை நடத்தி, அதிவேக ரெயில்திட்டத்துக்கான பணியை தொடங்க முடிவு செய்தனர்.
டெல்லியில் இன்று நடக்கும் இந்த திட்டத்துக்கான பயிற்சிப்பட்டறையில் ரெயில்வே அமைச்சக அதிகாரிகளுடன், ஜெர்மனி அதிகாரிகளுடன் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
