மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் இந்தியாவில் விற்பனையாகும் ஹெல்மெட்கள் அனைத்தும் இந்தியத்தர நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான சான்றளிக்கப்பட்டு இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு ஜூன் 1, 2020 முதல் அமலாகிறது. இருசக்கர வாகனங்களை ஓட்டும் போது பயன்படுத்தப்படும் ஹெல்மெட்கள் தரமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் விபத்தில் சிக்குவோர் முன்பை விட அதிகளவு பாதுகாக்கப்படுவர்.

மத்திய அரசின் புதிய உத்தரவு படி ஜூன் 1, 2020 முதல் இந்திய தரம் நிர்ணய செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட (BSI) இரு சக்கர வாகன ஹெல்மெட்டுகள்  மட்டுமேஇந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய முடியும். மேலும், இதுவரை விற்பனை செய்யப்பட்ட மலிவு விலை மற்றும் BSI சான்றிதழ் இல்லாத ஹெல்மெட்டுகளுக்கு, 2021 ஜூன், 1 முதல் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தடைவிதித்து உள்ளது.