மேற்குவங்கத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம் சிலிகுரி அருகே சுக்னா பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் வீரர்கள் சிலர் பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் திடீரென தரையில் விழுந்து நொருங்கியது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், ஜெசிஓ அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ராணுவம் உத்தரவிட்டுள்ளது.