சபரிமலையில் ரெட் அலெட்! கேரளாவில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கேரளளாவின் திருவனந்தபுரம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. சபரிமலை அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

Heavy rains continue to lash Kerala; IMD issues red alert for one district sgb

கேரளாவின் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், அந்மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருவனந்தபுரம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கண்ணூர் மற்றும் காசர்கோடு தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் மாலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. நவம்பர் 22 முதல் 24 வரை மாநிலத்தில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கல்யாண சீசனில் 38 லட்சம் திருமணங்கள்... 4.74 லட்சம் கோடி வர்த்தகம்: CAIT கணிப்பு

Heavy rains continue to lash Kerala; IMD issues red alert for one district sgb

குறிப்பாக திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் பலத்த காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் சிரமங்களைச் சந்தித்துள்ளனர்.

ரெட் அலர்ட் என்பது 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கு மேல் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதைக் குறிக்கும். ஆரஞ்சு அலர்ட் என்றால் 6 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்யும் என்று பொருள். மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டால் 6 முதல் 11 செமீ வரை கனமழை பெய்யக்கூடும்.

ஆன்லைனில் 5 லட்சம் மாடுகளை விற்று ரூ.500 கோடி சம்பாதித்த ஐ.ஐ.டி. மாணவிகள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios