Asianet News TamilAsianet News Tamil

அமெரிக்கத் தூதரகத்தை அலறவிட்ட கேரளா ‘ரெட் அலர்ட்! கடந்த 50 ஆண்டுகளில் கண்டிடாத கனமழை!

கடந்த 50 ஆண்டுகளில் இப்படியொரு மழையைக் கேரளா கண்டதில்லை, தொடர்ந்துவரும் பெருமழையின் காரணமாகப் பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.   

Heavy Rain Kills 26 In Kerala, Red Alert For Idukki Dam
Author
Idukki, First Published Aug 10, 2018, 8:03 PM IST

கடந்த 50 ஆண்டுகளில் இப்படியொரு மழையைக் கேரளா கண்டதில்லை, தொடர்ந்துவரும் பெருமழையின் காரணமாகப் பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.   

கடந்த சில நாட்களாக, கேரளாவில் பெருமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள 22 அணைகளில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாக, நேற்று   அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன். 26 ஆண்டுகளுக்குப் பிறகு, இடுக்கியிலுள்ள செருதோணி அணையின் ஒரு மதகு மட்டும் நேற்று திறக்கப்பட்டது. இதன் மொத்த கொள்ளளவு 2403 அடி என்ற நிலையில், நேற்று இதன் நீர்மட்டம் 2400 அடியைக் கடந்தது. இதனால், இன்று முதல் இடுக்கி அணையின் மூன்று மதகுகளில் இருந்து நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் பெரியாறில் வெள்ளம் பாய்கிறது. அப்பகுதியில் ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Heavy Rain Kills 26 In Kerala, Red Alert For Idukki Dam

இந்த மழையினால் இடுக்கி, வயநாடு, மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டத்தின் சில பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.  இந்தப் பெருமழை பாதிப்பு பற்றிப் பேசிய கேரள வருவாய்த் துறை அமைச்சர் சந்திரசேகரன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். “இந்த மாதம் 13ஆம் தேதி வரை மழை தொடரும் என்று வானிலை அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.  

Heavy Rain Kills 26 In Kerala, Red Alert For Idukki Dam

மழை தொடர்வதால் இடுக்கி, வயநாடு, எர்ணாகுளம், பத்தனாம்திட்டா மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேசியப் பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த 10 குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.  மேலும், வெள்ளப் பாதிப்பில் சிக்கித் தவிப்பதால், யாரும் கேரளாவுக்குச் செல்ல வேண்டாம் என்று அந்நாட்டு குடிமக்களை சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios