கேரளாவில் கடந்த 50 ஆண்களில் இல்லாத அளவில், கேரளாவில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

இதுவரை கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு 29 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பலர் மாயமானதாக கூறப்படுகிறது. இதுவரை 53 ஆயிரம் போ் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று உள்ளனர்.


 
நில சரிவில் சிக்கி, 29 ஆக உயா்ந்துள்ளது. கேரள மாநிலத்தில் மொத்தம் உள்ள 58 அணிகளில் 22 அணைகள் முழுமையாக நிரம்பி உள்ளத்தால், அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக கேரளா முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறந்து விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

கேரளாவின் பல்வேறு  மாவட்டங்களில் நிலசரிவில் பல வீடுகள்  தரையோடு மட்டமாகி உள்ளன. சாலைகள் இரண்டாக பிளந்து உள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக  உள்ளது. சாலை முழுவதும் மரங்கள்  வேரோடு சாய்ந்து உள்ளது.