Asianet News TamilAsianet News Tamil

குஜராத்தில் கனமழை.. மின்னல் தாக்கி 20 பேர் பலியான சோகம் - இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்ன அமித் ஷா!

New Delhi : குஜராத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த பருவமழையால், மின்னல் தாக்கி பல பகுதிகளில் பயிர்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ள அதே நேரத்தில் 20 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

heavy rain and lightning killed twenty killed in gujarat union minister amit shah condolence ans
Author
First Published Nov 27, 2023, 12:19 PM IST | Last Updated Nov 27, 2023, 12:19 PM IST

மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உள்ளூர் நிர்வாகம் சீரான முறையில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

"குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் மோசமான வானிலை மற்றும் மின்னல் காரணமாக பலர் இறந்த செய்தி கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த சோகத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளூர் நிர்வாகம் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்" என்று திரு ஷா தெரிவித்துள்ளார். 

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) அறிக்கைபடி, தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா மாவட்டங்களின் சில பகுதிகளில் பெய்து வரும் மழை இன்று திங்கள்கிழமை முதல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. குஜராத் முழுவதும் பெய்த கனமழையால் பயிர்களும் பெரிய அளவில் நாசமாகியுள்ளன. 

குஜராத்தில் உள்ள 252 தாலுகாக்களில் 234 தாலுகாக்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக மாநில அவசரநிலை செயல்பாட்டு மையத்தின் (SEOC) தகவல்கள் தெரிவிக்கின்றன. சூரத், சுரேந்திரநகர், கெடா, தபி, பருச் மற்றும் அம்ரேலி போன்ற மாவட்டங்கள் குறிப்பாக 16 மணி நேரத்தில் 50 முதல் 117 மிமீ வரையிலான கனமழையைக் கண்டன.

தெலுங்கானா தேர்தல் பணி.. இடையில் திருமலையில் ஸ்வாமி தரிசனம் - இன்று பல நிகழ்வுகளில் பங்கேற்கும் பிரதமர்!

வடகிழக்கு அரபிக்கடலில் ஒரு சூறாவளி சுழற்சி நிலைபெற்றுள்ளதாகவும், சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios