டெல்லி புகைமூட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
டெல்லியில் கடந்த வாரம் கொண்டாடப்பட்ட தீபவாளி பண்டிகைக்கு பிறகு காற்றின் மாசு அளவு மிகவும் அதிகரித்தது. ஒருவாரம் ஆகியும், நிலைமை அங்கு இன்னும் சீரடையவில்லை. இதன் காரணமாக ஏற்கெனவே போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது டெல்லியில் ஆங்காங்கே மூடுபனி தொடங்கியிருப்பதால், புகை மூட்டத்தின் தாக்கம் மேலும் அதிகமாகியுள்ளது.
இதுமட்டுமின்றி பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில், அறுவடைக்குப் பின்னர் வயல்களில் எஞ்சி நிற்கும் தாள்களை எரித்ததால் மேலும், புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் உட்பட எதுவும் இந்த புகை மூட்டத்திலிருந்து தப்பவில்லை.
இந்த புகைமூட்டத்தை அகற்றுவது தொடர்பாக நேற்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், அம்மாநில அமைச்சரவை அவசரமாக கூடி விவாதித்தது. மத்திய அரசு தலையிட்டு உதவ வேண்டும் என்றும் இதில் வலியுறுத்தப்பட்டது.
இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், டெல்லி மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகள் அனைத்தும் 3 நாட்களுக்கு தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புகைமூட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் குர்கான் மாவட்டத்தில் குப்பைகளை எரிப்பதற்கு 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, டெல்லியின் பல்வேறு இடங்களில் புகைமூட்டத்தை தணிக்கும் வகையில், வாகனங்கள் உதவியுடன் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன் மூலம் நிலைமையை ஒரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் மோசமான புகை மூட்டம் குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
அங்கு தற்போது நிலவும் மோசமான நிலைமையை கண்காணித்து அதன் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக கருதி உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
டெல்லி புகைமூட்டம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
டெல்லியில் கடந்த வாரம் கொண்டாடப்பட்ட தீபவாளி பண்டிகைக்கு பிறகு காற்றின் மாசு அளவு மிகவும் அதிகரித்தது. ஒருவாரம் ஆகியும், நிலைமை அங்கு இன்னும் சீரடையவில்லை.
இதன் காரணமாக ஏற்கெனவே போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது டெல்லியில் ஆங்காங்கே மூடுபனி தொடங்கியிருப்பதால், புகை மூட்டத்தின் தாக்கம் மேலும் அதிகமாகியுள்ளது. இதுமட்டுமின்றி பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில், அறுவடைக்குப் பின்னர் வயல்களில் எஞ்சி நிற்கும் தாள்களை எரித்ததால் மேலும், புகை மூட்டம் சூழ்ந்துள்ளது.
ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் உட்பட எதுவும் இந்த புகை மூட்டத்திலிருந்து தப்பவில்லை. இந்த புகைமூட்டத்தை அகற்றுவது தொடர்பாக நேற்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், அம்மாநில அமைச்சரவை அவசரமாக கூடி விவாதித்தது.
மத்திய அரசு தலையிட்டு உதவ வேண்டும் என்றும் இதில் வலியுறுத்தப்பட்டது. இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், டெல்லி மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகள் அனைத்தும் 3 நாட்களுக்கு தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புகைமூட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் குர்கான் மாவட்டத்தில் குப்பைகளை எரிப்பதற்கு 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, டெல்லியின் பல்வேறு இடங்களில் புகைமூட்டத்தை தணிக்கும் வகையில், வாகனங்கள் உதவியுடன் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.