Asianet News TamilAsianet News Tamil

சுட்டெரிக்கும் வெயில்... 22-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த முதல்வர்..!

பீகாரில் சுட்டெரிக்கும் வெயிலின் உக்கிரத்தை தாங்க முடியாமல் 70 பேர் உயிரிழந்த நிலையில், அம்மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு 22-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

heatwave kills... Govt schools to remain closed till June 22
Author
Bihar, First Published Jun 17, 2019, 3:46 PM IST

பீகாரில் சுட்டெரிக்கும் வெயிலின் உக்கிரத்தை தாங்க முடியாமல் 70 பேர் உயிரிழந்த நிலையில், அம்மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு 22-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. heatwave kills... Govt schools to remain closed till June 22

தென்மேற்கு பருவ மழை தொடங்கி பல மாநிலங்களில் மழை பெய்து வரும் நிலையிலும் நாட்டின் வட மாநிலங்களில் கடும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. முக்கியமாக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெயிலுடன் அனல் காற்றும் வீசி வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பீகார் தலைநகர் பாட்னாவில் 45.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

 heatwave kills... Govt schools to remain closed till June 22

கடுமையான வெப்பம் காரணமாக, அவுரங்கபாத், கயா, நாவாடா ஆகிய மாவட்டங்ளில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாட்னாவில் வரும் 19-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. heatwave kills... Govt schools to remain closed till June 22

இந்நிலையில், சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் சற்றும் குறையாமல் இருப்பதால் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விடுமுறை நாட்கள் ஜூன் 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். மேலும் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios