உ.பி.யில் தடம் புரண்ட ரயில்.. 4 பேர் பலியான சோகம்.. வெடிகுண்டு தாக்குதலா? ரயிலின் ஓட்டுனர் கொடுத்த ஷாக்!
Chandigarh Dibrugarh Express : சண்டிகர் - திப்ருகார் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் திடீரென தடம் புரண்ட நிலையில், அந்த விபத்தில் சிக்கி 4 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கோண்டாவில், இன்று ஜூலை 18ம் தேதி வியாழக்கிழமை மாலை, சண்டிகர்-திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், இதுவரை அந்த விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டபோது பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக அவ்வண்டியின் ஓட்டுநர் கூறியுள்ளார்.
விபத்துக்குள்ளான அந்த ரயிலின் 23 பெட்டிகளில், 21 பெட்டிகள் தடம் புரண்டன என்றும், இதில் ஐந்து ஏசி பெட்டிகள் மற்றும் ஒரு பொதுப் பெட்டி, மற்றும் உணவு சாமிக்கும் Pantry பெட்டி ஆகியவை அடங்கும் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காதலனை நம்பி சென்ற சிறுமியை வேட்டையாடிய 7 நபர்கள்; பொள்ளாச்சியை மிஞ்சிய தேயிலை தோட்ட சம்பவம்
மேலும் இந்த விபத்தில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 2.5 லட்சமும், சிறிய அளவில் காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கதிஹார்-அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் கவுகாத்தி-ஸ்ரீமாதா வைஷ்ணோதேவி கத்ரா எக்ஸ்பிரஸ் உட்பட இந்த வழித்தடத்தில் உள்ள மற்ற ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன என்று வடகிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி பங்கஜ் சிங் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு சம்பவ இடத்திலுள்ள அதிகாரிகளிடம் கூறப்பட்டுள்ளதாக யோகி ஆதித்யநாத்தின் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.