120 பெண்களை அரியானாவைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவர் மிரட்டி பலாத்காரம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாபா அமர்புரி என்ற பில்லு என்கிற அந்த மந்திரவாதியை ஹிசார் அருகே ஃபெடஹாபாத் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

மந்திரவாதி குடும்ப சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு இவரைத் தேடி, பெண்கள் வருவது வழக்கம். மந்திர தந்திரத்தால் அதைத் தீர்த்து வைக்கிறேன் என்று ஆரம்பத்தில் மேஜிக் காட்டுவாராம் பில்லு. அதைப் பார்க்கும் பெண்கள், ஆஹா பெரிய மந்திரவாதிதான் என்று நம்பிவிடுவார்கள். இதை வைத்து பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்வார். பெண்களை பலாத்காரம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்த பில்லு அதனை செல்போன் மூலம் வீடியோவாக பதிவு செய்து சம்மந்தப்பட்ட பெண்களை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்ததும், பணம் பறித்து வந்ததும் அம்பலமாகியுள்ளது. 

இது தொடர்பான வீடியோவை உறவினர் ஒருவர் ஃபெடஹாபாத் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததையடுத்து பில்லு கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவெடுத்துள்ளனர்.

அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சதி வலையில் தாம் சிக்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.