அரியானாவில் திசை மாறி வந்த லாரி கார், பைக்கில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அரியானா மாநிலத்தின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள கோஹானா-பானிபட் நெடுஞ்சாலை வழியாக இன்று மாலை சுமார் 6 மணியளவில் வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக திசை மாறி வந்து கார் மற்றும் ஜீப்பின் மீது பயங்கரமாக மோதியது.  

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் படுகாயமடைந்த 8 பேரை மீட்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.