சகிப்புதன்மை இன்மை மற்றும் பாதுகாப்பு என்ற பெயரில் இந்த நாட்டில் நடக்கும் வன்முறைகளால், தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்ற உணர்வு இஸ்லாமியர்களுக்கு  ஏற்பட்டுள்ளததாக குடியரசுத் துணைத் தலைவர்  ஹமீத் அன்சாரி  தெரிவித்துள்ளார்

கடந்த 2007 ம் ஆண்டு முதல் குடியரசு துணைத் தலைவராக இருப்பவர் ஹமிது அன்சாரி.  அவரது பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதையொட்டி ராஜ்யசபா  தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.

அப்போது நாட்டில் சகிப்பு தன்மை இன்மை நிலவுவது குறித்து, பிரதமருடன் பேசியதாகவும்,  அப்போது என்ன பேசப்பட்டது என்பதை வெளியே கூறுவது தவறு என்றும் தெரிவித்தார்.

நாட்டில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் நாட்டின் கொள்கைகளை முறித்து விட்டன. தாங்கள் பாதுகாப்பாக இல்லை என முஸ்லிம்கள் கருதுவது உண்மை தான் என்று அதிரடியாக தெரிவித்தார்.

இதை, நாட்டின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் நான் கேட்கிறேன். வட மாநிலங்களில் இப்பிரச்னை அதிகமாக உள்ளது. சகிப்புதன்மை என்பது நல்லொழுக்கம் தான். இருப்பினும், சகிப்பு தன்மையில் இருந்து ஏற்று கொள்ளுதல் என்ற நிலைக்கு செல்ல வேண்டும்.

முத்தலாக் என்பது சமூக தவறு. மத ரீதியாக தேவையான ஒன்று அல்ல. ஆனால், இதை ஏற்க மாட்டோம் என்று மட்டுமே நீதிமன்றங்கள் கூற முடியும். சீர்திருத்தம் என்பது சம்பந்தப்பட்ட சமூகத்திற்குள் நடக்க வேண்டிய ஒன்றும் என்றும் தெரிவித்தார்.

சகிப்புதன்மை இன்மை மற்றும் பாதுகாப்பு என்ற பெயரில் இந்த நாட்டில் நடக்கும் வன்முறைகளால், தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்ற உணர்வு இஸ்லாமியர்களுக்கு  ஏற்பட்டுள்ளதாக குடியரசுத் துணைத் தலைவர்  ஹமீத் அன்சாரி  தெரிவித்துள்ளார்