Asianet News TamilAsianet News Tamil

கேரள பெண் ஹாடியாவை கட்டிக்கிறதுக்கு முன்பேயே ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் அவள் கணவருக்கு தொடர்பு இருந்ததாம்...

Hadiyas husband was in touch with IS men before their marriage NIA
Hadiya's 'husband' was in touch with IS men before their marriage: NIA
Author
First Published Dec 4, 2017, 5:56 PM IST


கேரள பெண் ஹாடியாவின் கணவருக்கு திருமணத்துக்கு முன்பேயே ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களுடன் தொடர்பு இருந்தது என்று கூறியுள்ளது தேசியப் புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ.,

கேரளாவைச் சேர்ந்த மருத்துவப் படிப்பு மாணவியான ஹாதியாவின் கணவர் திருமணத்துக்கு முன்பு, ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக தேசிய புலனாய்வு முகமை கூறியுள்ளது இந்தப் பிரச்னையில் மேலும் தீவிரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மருத்துவ மாணவியான அகிலா அசோகன், ஹாதியா என பெயர் மாற்றப்பட்டு, முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டார். அவரை ஷபின் என்பவர், திருமணம் செய்து கொண்டார். ஆனால், அகிலாவின் தந்தை, தனது மகளை சிரியாவுக்கு கடத்திச் சென்று ஐ.எஸ்., இயக்கத்தில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்த திட்டம் இடுகின்றனர் என்று கூறி வழக்கு தொடுத்தார். அவரது வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அப்போது இதனை லவ் ஜிஹாத் என்று ஏற்றுக் கொண்டு, திருமணத்தை செல்லாததாக்கியது. 

ஆனால், இது ஷபின் மூலம் உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது.  ஹாதியாவின் லவ் ஜிகாத் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர் மருத்துவப் படிப்பை தொடர அனுமதியளித்தது. இதையடுத்து, அவர் சேலத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார்.

இந்நிலையில், ஹாதியாவின் கணவர் ஷபின் ஜஹான், திருமணத்துக்கு முன்னர் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. 

கேரளாவில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்ற திட்டம் தீட்டியதாக ஓமர் அல் ஹிந்தி வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். ஐ.எஸ். இயக்கத்தைச் சேந்த மன்சீத் மற்றும் சஃப்வான் ஆகியவர்கள், இவ்வாறு கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் இருவர். இவர்களை கடந்த ஆண்டு கைது செய்த தேசிய புலனாய்வு போலீசார், இவர்களுடன் பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஹாதியாவின் கணவர் ஷபின் ஜஹான் திருமணத்துக்கு முன்னர் துடிப்பான தொடர்பில் இருந்ததாகவும், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அதன் அரசியல் அமைப்பான எஸ்டிபிஐ ஆகியவற்றுடன் தொடர்பில் இருந்ததாகவும் என்.ஐ.ஏ., விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களின் தற்போதைய நிலை குறித்து விசாரித்து வருவதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

சென்ற டிசம்பர் 2016ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்வு முடிந்து ஒரு வருட காலத்துக்குள் பல்வேறு பிரச்னைகள் துளிர் விட்டுள்ளன. மன்சித் மற்றும் சஃப்வான் இருவரும் சென்ற வருடம் அக்டோபரில் கைது செய்யப்பட்டனர். ஓமர் அல் ஹிந்தி விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை பதிவு செய்த  குற்றச்சாட்டில், இந்த விவகாரம் ஐஎஸ் அமைப்பின் துணையுடன் நீதிபதிகள், மூத்த போலீஸ் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், தென் இந்தியாவின் முக்கிய இடங்கள் என குறிவைத்து இயங்கியது. 

மன்சீத் என்பவர் எஸ்டிபிஐ., யுடன் தொடர்பு கொண்டிருந்தவர். ஷபிர் ஜஹானின் நெருங்கிய நண்பரான முனீர் என்பவருடன் மன்சீத்துக்கு தொடர்பு இருந்தது. வே டூ நிகாஹ் என்ற இணையதளத்தை நடத்தி வந்த அவர், அதன் மூலமே ஹாதியாவுடன் ஷபினை சேர்த்து வைத்து இருவருக்கும் டிசம்பர் 2016ல் திருமணத்தை நடத்தினாராம். இருப்பினும் கேரள நீதிமன்றம் மே மாதத்தில் இந்தத் திருமணத்தை செல்லாததாக்கியது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios