குஜராத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், தீபாவளிப் பண்டிகையை எல்லையைப் பாதுகாக்‍கும் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து கொண்டாட முடிவு செய்துள்ளனர். 

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை வித்தியாசமான முறையில் கொண்டாட முடிவு மேற்கொண்டனர்.

இந்திய ராணுவம், பாகிஸ்தான் பகுதிக்‍குள் புகுந்து அங்குள்ள தீவிரவாத முகாம்களை அழிக்‍க சர்ஜிகல் தாக்‍குதல் நடத்தியதைக்‍ கொண்டாடும் வகையில், எல்லைப் பகுதியில் நாட்டைக்‍ காத்து வரும் ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியைக்‍ கொண்டாட இளைஞர்கள் முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கட்ச் பகுதியில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அவர்கள் தீபாவளியை கொண்டாடவுள்ளனர். இதற்காக, ராணுவ வீரர்களுக்‍கு பரிசுப் பொருட்களையும், வாழ்த்து அட்டைகளையும் இளைஞர்கள் சேகரித்து வருகின்றனர்.