குஜராத்தில் 5 குழந்தைகளுடன் பெண் ஒருவர் கிணற்றில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் பாஞ்ச் பிப்லா கிராமத்தை சேர்ந்தவர் கீதா பாலியா. இந்தப் பெண்ணுக்கு 5 குழந்தைகள் உள்ளன. அவர் வறுமையால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளனர். 

இந்த நிலையில் 5 குழந்தைகளை கிணற்றில் வீசி தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவர்களைக் காப்பாற்றும் நோக்கத்தில் உடனடியாக கிணற்றில் குதித்தனர். 

ஆனால் கிணற்றிற்குள்ளே 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. கீதா பாலியாவையும் அவரது மூத்த மகளையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிறகு அவர்கள் தற்போது நலமாக உள்ளதாக கூறப்படுகிறது. இறந்த குழந்தைகள் 1½ வயது முதல் 8 வயது வரையிலானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடந்த சில ஆண்டுகளாக வறுமையின் பிடியில் சிக்கி, சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் தவித்து வந்துள்ளார். இதனால் பிள்ளைகளை கிணற்றில் வீசிவிட்டு, நானும் குதித்தேன் என்று கீதா பாலியா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.