பைபர்ஜாய் புயலை அமைதிப்படுத்த பாஜக எம்எல்ஏ பிரத்யுமன்சிங்க் ஜடேஜா, ஜாகாவ் கடற்கரையில் பூஜை மேற்கொண்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவாகி உள்ளது பைபர்ஜாய் புயல். பைபர் ஜாய் புயல் தற்போது தீவிர புயலாக உள்ளது. குஜராத்தில் இந்த புயல் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 6 மணி நேரத்தில் இந்த புயல் வேகமாக வலிமை அடையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பிறகு இது அதிதீவிர புயலாக வலுப்பெறும்.தற்போது இந்த புயல் மிக மெதுவாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த பைபர் ஜாய் புயல் ஆனது குஜராத்தில் தீவிரமான மழையை இது கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைபர்ஜாய் புயல் தென்இந்திய கடல் பகுதிகளுக்கு அருகே வர வாய்ப்பு இல்லை.

அரபிக்கடலில் தீவிர புயலாக இருக்கும் பைபர்ஜாய் புயல் அதி தீவிர புயலாக வாய்ப்பு உள்ளது. இந்த புயலை அமைதிப்படுத்த பாஜக எம்எல்ஏ ஒருவர் கடற்கரையில் பூஜை மேற்கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..வெறித்தனமாக சண்டை போட்ட திமுக கவுன்சிலர் & வார்டு செயலாளர்.. கோவையில் அதிர்ச்சி - வைரல் வீடியோ !!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாகாவ் கடற்கரைக்கு வந்த பாஜக எம்எல்ஏ பிரத்யுமன் சிங்க் ஜடேஜா புயலினை அமைதிப்படுத்தும் வகையில் திடீரென பூஜையில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒருபக்கம் விமர்சனங்கள் குவிந்தாலும், மற்றொரு பக்கம் இவருக்கு ஆதரவான கருத்துக்களும் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க..இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!