குஜராத்தில் ஆட்டோ மீது லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்துள்ளனர். 

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள மன்குவா பகுதியில் ஒரு ஆட்டோவில் 15-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, எதிர் திசையில் வேகமாக வந்த லாரி ஆட்டோவில் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ரிக்‌ஷா அப்பளம் போல் நொறுங்கியது.

 

இந்த விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10  பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 7 பேரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.