குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினருக்கு 3 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தொடங்கியுள்ளது.

பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பல்வந்த் சிங் ராஜ்புத் மற்றும் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல் போட்டியிடுகின்றனர்.

இவர்களில் இருவர் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது இடத்தை கைப்பற்றும் நோக்கில், காங்கிரஸ் கட்சி சார்பாக, அந்த கட்சி தலைவர் சோனியாவின் செயலர், அஹமது படேல் நிறுத்தப்பட்டுள்ளார். 

ஆனால், காங்கிரஸ் இருந்து, எம்.எல்.ஏ.,க்கள் விலகி வருவதால், ராஜ்யசபா தேர்தலில், மூன்றாம் இடத்தை கைப்பற்ற முடியாமல் போய்விடுமோ என்ற பயம், காங்கிரஸ், தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏக்களில், 44 பேர், அந்த கட்சியின் ஆட்சி நடக்கும், கர்நாடகா தலைநகர், பெங்களூரு அழைத்து செல்லப்பட்டு, சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் அவர்கள் நேற்று அகமதாபாத் திரும்பினர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், குஜராத் மாநில சட்டமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் தொடங்கியுள்ளது. 

நேற்று  குஜராத் மாநில முதலமைச்சர்,  பாஜக சார்பில் போட்டியில் உள்ள 3 பேரும்  வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த அறிவிப்பு காரணமாக, குஜராத்தில் மறைமுகமான குதிரை பேரத்தில் பாஜக ஈடுபட்டுள்ளது மீண்டும் உறுதியாகியுள்ளது என்று தெரிகிறது.