Jal Jeevan Mission: ஜல் ஜீவன் மிஷன்: 100% குடிநீர் இணைப்பு வழங்கிய 7-வது மாநிலம் குஜராத்: தமிழகம் எந்த இடம் ?
மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு 100 சதவீதம் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கிய மாநிலத்தில் 7-வதாக குஜராத் மாநிலமும் இணைந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு 100 சதவீதம் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கிய மாநிலத்தில் 7-வதாக குஜராத் மாநிலமும் இணைந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு முன், கோவா, தெலங்கானா, அந்தமான் நிகோபர் தீவுகள், புதுச்சேரி, தாத்ரா நாகர் ஹாவேலி மற்றும் டாமன் டையு ஆகியவை மைல்கல்லை எட்டியிருந்தன. இப்போது குஜராத் மாநிலமும் இணைந்துள்ளது.
ஆளுநரின் முடியைத் தொட்டால்கூட கேரள அரசைக் கலைக்யுங்கள்!சுப்பிரமணியன் சுவாமி காட்டம்
கிராமங்களில் வசிக்கும் ஒருவருக்கு, தினசரி 55 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும் என்பதற்காக கடந்த 2019ம ஆண்டு ஜல் ஜீவன் மிஷனை மத்திய அரசு தொடங்கியது. இதன் மூலம் 2024ம் ஆண்டுக்குள், கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதாகும்.
தற்போது, கிராமங்களில் 10.41 கோடி அதாவது 54.36 சதவீதம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 19.15 கோடி வீடுகளுக்கு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் தரவரிசையில் கடைசி இடத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் இருக்கிறது.
அங்கு, 19.41 சதவீதம் வீடுகளுக்கு மட்டுமே குழாய்மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது 2.64 கோடி வீடுகளில் 51.28 லட்சம் வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து பீகாரில் 1.60 கோடி, மகாராஷ்டிராவில் 1.03 கோடி, குஜராத்தில் 91.73 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
4 நாட்களுக்குப்பின்! தெலங்கானாவில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணம் தொடர்ந்தது
தமிழகத்தில் 56.30 சதவீதம் வீடுகளுக்கு மட்டுமே குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம், ஒரு கோடியே 24 லட்சத்து 95 ஆயிரத்து 997 வீடுகளில், 70 லட்சத்து34 ஆயிரத்து 998 வீடுகளுக்கு இதுவரை குழாய் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தொடக்கப்பட்டதிலிருந்து இதுவரை 7.17 கோடி குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 2020-21ம் ஆண்டில் அதிகபட்சமாக 3.22 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து 2021-22ம் ஆண்டில் 2.05 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலவசம் என்பது வாக்களார்களை கவர்வதற்காகத்தான்: தேர்தல் ஆணையத்துக்கு பாஜக பதில்
பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான ஜல் ஜீவன் மிஷன் மூலம் சுத்தமான குடிநீர் கிடைப்பதன் மூலம் குழந்தைகளின் உடல்நலன் மேம்படும். அமெரிக்க பொருளாதார வல்லுநர், நோபல் பரிசாளரான மைக்கேல் க்ரீமர் கூறுகையில் “ ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் இந்தியாவில் 5வயதுக்குட்பட்ட 1.36 லட்சம் குழந்தைகளின் வாழ்க்கை பாதுகாக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். ஐ.நா.வின் மேம்பாட்டுத் திட்டமும் ஜல் ஜீவன் மிஷனுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளது