Asianet News TamilAsianet News Tamil

குஜராத் முன்னாள் அமைச்சர் படுகாயம்… மாடு தாக்கியதில் காலில் எழும்பு முறிவு!!

குஜராத்தின் முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல் திரங்கா யாத்திரை செல்லும் போது காடி நகரில் தெரு மாடு ஒன்று திடீரென தாக்கியதில் படுகாயமடைந்தார். 

Gujarat Ex Minister Nitin Patel Hit By Galloping Cow During yatra
Author
Gujarat, First Published Aug 13, 2022, 8:44 PM IST

குஜராத்தின் முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல் திரங்கா யாத்திரை செல்லும் போது காடி நகரில் தெரு மாடு ஒன்று திடீரென தாக்கியதில் படுகாயமடைந்தார். முன்னதாக குஜராத் மாநிலம் காடியில் திரங்கா யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் குஜராத்தின் முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல் உட்பட சுமார் 2,000 பேர் வரை கலந்துக்கொண்டு தேசிய கொடியை கையில் ஏந்தி யாத்திரை சென்றனர். இந்த யாத்திரை அங்குள்ள காய்கறி சந்தையை அடைந்த போது திடீரென்று கூட்டத்திற்குள் ஓடி வந்த ஒரு மாடு அனைவரையும் தூக்கி வீசியபடி ஓடியது. இதில் நிதின் படேல் படுகாயமடைந்தார். இதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சுதந்திர பேரணியில் துப்பாக்கியால் சுட்ட அமைச்சர்.. தெறித்து ஓடிய பொதுமக்கள் - வைரல் வீடியோ !

Gujarat Ex Minister Nitin Patel Hit By Galloping Cow During yatra

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய படேல், 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள காடியில் மாநில பாஜக ஏற்பாடு செய்திருந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். கிட்டத்தட்ட 2,000 பேர் பங்கேற்ற காடியில் ஒரு திரங்கா யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது கிட்டத்தட்ட 70 சதவீத தூரத்தை முடித்து காய்கறி சந்தையை அடைந்தது, திடீரென்று ஒரு மாடு ஓடி வந்தது.

இதையும் படிங்க: ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் மகன் உள்பட 4 பேர் காஷ்மீர் அரசுப் பணியிலிருந்து நீக்கம்

Gujarat Ex Minister Nitin Patel Hit By Galloping Cow During yatra

இதில் நானும் மேலும் சிலரும் தரையில் தூக்கி வீசப்பட்டோம். அதில் படுகாயம் அடைந்த நான் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் செய்ததில் இடது காலில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. மருத்துவர்கள் கால் முறிவு சரியாக 20 முதல் 25 நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர் என்று தெரிவித்தார். இதுக்குறித்த வீடியோவில் படேல் மூவர்ணக் கொடியை பிடித்திருந்தார். அவரை ஒரு மக்கள் குழு சூழந்திருந்தது. அப்போது, மாடு ஒன்று கூட்டத்தின் மீது மோதியது. இது படேலை கடந்து சென்றது. அவர் தனது சமநிலையை இழந்து தரையில் விழுந்ததை காணலாம். 

Follow Us:
Download App:
  • android
  • ios