குஜராத் மாநிலத்தில் 2ம் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிந்தது. வரும் 5ம் தேதி 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.
குஜராத் மாநிலத்தில் 2ம் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிந்தது. வரும் 5ம் தேதி 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.
குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டத் தேர்தல் கடந்த 1ம் தேதி 89 தொகுதிகளுக்கு நடந்தது. இதில் 63 சதவீதம் வாக்குகள் பதிவாகின என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதையடுத்து 2ம் கட்டத் தே ர்தல் வரும் 5ம் தேதி 93 தொகுதிகளுக்கு நடக்கிறது. இந்தத் தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிந்துவிட்டது.
குஜராத் தேர்தலில் வெளிப்படைத்தன்மை!13,065 வாக்குசாவடிகளில் வெப்காஸ்டிங் கண்காணிப்பு

2ம் கட்டத் தேர்தல் முடிந்தபின் வரும் 8ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அன்றைய தினம், இமாச்சலப்பிரதேசம், குஜராத் ஆகிய இரு மாநிலங்களிலும் நடந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது குறிப்பிடத்தக்கது.
இந்த 93 தொகுதிகளில் மொத்தம் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 60 சதவீதம் பேர் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மிகட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள், மற்றவர்கள் சுயேட்சை மற்றும் சிறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
குஜராத் சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு… 60.20% வாக்குகள் பதிவு!!
14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் அகமதாபாத், வதோதரா, காந்திநகர் உள்ளிட்ட தொகுதிகளும் அடங்கும். குறிப்பாக, முதல்வர் பூபேந்திர படேல் போட்டியிடும் காட்லோடியா தொகுதி, பட்டிதார் தலைவர் ஹர்திக் படேல் போட்டியிடும் விரம்கம் தொகுதி, அல்பேஷ் தாக்கூர் போட்டியிடும் காந்திநகர் தெற்கு ஆகியவை அடங்கியுள்ளன.

குஜராத்தில் கடந்த 1995ம் ஆண்டிலிருந்து ஆட்சியில் இருக்கும் பாஜக ஆட்சியை தொடர்ந்து தக்கவைக்க போராடி வருகிறது. பாஜகவுக்கு கடினமான போட்டியளிக்கும் வகையில் ஆம் ஆத்மி களமிறங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடிக்கும் தீவிரத்துடன் அரசியல் களம்கண்டது.
அதிலும் பிரதமர் மோடி கடைசி நேரத்தில் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்தார். வியாழக்கிழமை மாலை 50 கி.மீ தொலைவுக்கு 16 தொகுதி மக்களைச் சந்தித்து பிரதமர் மோடி வாக்குச் சேகரித்தார். இந்தியாவில் இந்த அளவு தொலைவுக்கு எந்தத் தலைவரும் பேரணி நடத்தி வாக்குச் சேகரித்தது இல்லை. ஏறக்குறைய 10 லட்சம் மக்கள் வரவேற்றதாக பாஜக தகவல்கள் தெரிவிக்கின்றன.
50 கி.மீ பேரணி!16 தொகுதிகள்: மெகாபேரணியில் பிரதமர் மோடி பிரச்சாரம்:10 லட்சம் பேர் திரண்டனர்
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் மாலையுடன் முடிந்த நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் “கடந்த சில நாட்களாக, குஜராத்தின் மூலை முடுக்கெல்லாம் பயணித்தேன்.
நான் எங்கு சென்றாலும் எனக்கு மக்களிடம் இருந்து அன்பான வரவேற்பு கிடைத்தது. கடந்த 20 ஆண்டுகளில் மக்கள் வளர்ச்சியைப் கண்டுள்ளர்கள், இந்தப் பாதை தொடர வேண்டும் என விரும்புகிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
