குஜராத் சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு… 60.20% வாக்குகள் பதிவு!!
குஜராத் சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 56.88% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 56.88% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரத்திற்குப் பிறகு குஜராத் மக்கள் இன்று (டிசம்பர் 1, 2022) முதல் கட்ட சட்டசபைத் தேர்தலுக்கு வாக்களிக்கத் தொடங்கியது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி சௌராஷ்டிரா-கட்ச் மற்றும் தெற்கு பிராந்தியங்களில் உள்ள 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் குஜராத் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
இதையும் படிங்க: குஜராத் தேர்தலில் வெளிப்படைத்தன்மை!13,065 வாக்குசாவடிகளில் வெப்காஸ்டிங் கண்காணிப்பு
நடந்து முடிந்த முதல்கட்ட தேர்தலில் 60.20% வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் 39 அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன - பாரதிய ஜனதா கட்சி (பாஜக), ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி), மற்றும் காங்கிரஸ் ஆகியவை முக்கியமானவை. 39 கட்சிகள் 718 ஆண் வேட்பாளர்கள் மற்றும் 70 பெண் வேட்பாளர்கள் உட்பட 788 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. ஆளும் பாஜக மாநிலத்தில் 27 ஆண்டுகால ஆட்சியைத் தக்கவைப்பதில் நம்பிக்கையுடன் உள்ளது. அதே நேரத்தில் மாநிலத்தில் தனது இரண்டாவது இடத்தைக் காப்பாற்ற காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.
இதையும் படிங்க: குஜராத் தேர்தல்: நண்பகல் ஒரு மணிவரை 35 சதவீதம் வாக்குப்பதிவு: மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு
பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி மற்றொரு மாநிலத்திற்குள் நுழைவதை நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில், பல்வேறு தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிவடைந்ததை அடுத்து 93 இடங்களுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறும். இரு கட்ட தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8 ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்துடன் சேர்ந்து வெளியாகும்.