GST for thiruppathi laddu...

ஜி.எஸ்.டி., வரி விதிப்பால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட், லட்டு, பிரசாதங்கள் மற்றும் அறை வாடகை போன்றவை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை கொண்டு வரும் வகையில், வரும், ஜூலை, 1 ஆம் தேதி முதல், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை அமல்படுத்தப்படவுள்ளது. இந்த வரிவிதிப்பு ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் கோயில்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் வருமானம் கொட்டும், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள், தரிசன டிக்கெட்டுகளின் விலை உயருகிறது.

தற்போது 1 லட்டு தயார் செய்ய 35 ரூபாய் செலவாகும் நிலையில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பிரசாதங்கள் தயார் செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதலாக 6 சதவீத வரி செலுத்த வேண்டிடும். இதனால் லட்டு உள்ளிட்ட பிரசாதங்களின் விலை உயரவுள்ளது. 

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்க, தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ள 500 ரூபாய்க்கு மேல் கட்டணம் உள்ள அறைகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்பதால் அறைகளின் வாடகையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

லட்டு, பிரசாதங்கள், அறை வாடகை என அனைத்தும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் உயரம் என்பதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.