GST Council slashes tax rates on 18

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 178 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைத்து ஜி.எஸ்.டி. கவுன்சில் நேற்று அறிவித்தது.

மறைமுக வரிகள் அனைத்தும் நீக்கப்பட்டு, நாடுமுழுவதும் ஒரே மாதிரியான வரியாக சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) கடந்த ஜூலை 1-ந்தேதி மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 

இந்த ஜி.எஸ்.டி. வரியில் 5 வகையான வரி நிலைகள் இருக்கின்றன. வரி இல்லாத பொருட்கள், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் ஆகிய படிநிலைகளில் பொருட்கள் வகைப்படுத்தப்பட்டு வரி விதிக்கப்படுகின்றன.

இந்நிலையில் அசாம் மாநிலம், கவுகாத்தியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் 23-ஆவது கூட்டத்தில் ஏராளமான பொருட்களின் வரிகள் மாற்றி அமைக்கப்பட்டன.

கைகளால் தயாரிக்கப்படும் நாற்காலி, மேஜை உள்ளிட்ட மரச் சாமான்கள், மின்சார ஸ்விட்ச், பிளாஸ்டிக் பைப் உள்ளிட்டபிளாஸ்டிக் பொருள்கள், கழிவறைக் கோப்பைகள், கார், பைக் சீட், அதற்கான கவர்கள், டியோரன்ட், ஷூபாலிஷ், சலவைப்பவுடர், சலவை சோப், மார்பில், தீ அணைக்கும் கருவி, கைக்கடிகாரம், பிளேடு, மெத்தைகள், சேவிங் கிரீம், ஆப்டர் ஷேவ், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட 178 பொருட்கள் 18 சதவீத வரி விதிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.