ஜி.எஸ்.டி துணை மசோதாக்கள் நிறைவேறின...ஜூலை 1-ந்தேதி நடைமுறைக்கு வருவது உறுதியாகிறது

சரக்கு மற்றும் சேவைவரியின்(ஜி.எஸ்.டி.) 4 துணை மசோதாக்களும் மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஜூலை 1-ந்தேதி நாடுமுழுவதும் ஒரே சீரான வரிமுறையான ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் கூறிய பல்வேறு திருத்தங்களை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, மத்திய ஜி.எஸ்.டி.(சி-ஜி.எஸ்.டி.), ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மோசதா(ஐ-ஜி.எஸ்.டி.), ஜி.எஸ்.டி. இழப்பீட்டு சட்டம், யூனியன் பிரதேசங்களுக்கான ஜி.எஸ்.டி.(யூ-ஜி.எஸ்.டி.) ஆகிய 4 மசோதாக்கள் நிறைவேறின.

மக்களவையில், ஜி.எஸ்.டி. மசோதாவின் 4 துணை மசோதாக்கள் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி திங்கள்கிழமை அறிமுகம் செய்தார். அந்த 4 மசோதாக்கள் மீதான விவாதம் நேற்று நடந்து.

ஏறக்குறைய இந்த 4 மசோத்தாகள் மீது 7 மணிநேரம் வரை விவாதம் நடந்தது.

இந்த விவாத்தின் இறுதியில் பேசிய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, “ நாடுமுழுவதும் ஜூலை 1-ந்தேதி ஒரே சீரான வரிமுறை நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம், பொருட்களின் விலை ஓரளவுக்கு குறையும். ஜி.எஸ்.டி. வரியில் பொருட்களை யார் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொருத்து வரி மாறும். அத்தியாவசிய பொருட்களுக்கு வரி குறைவாகவும், ஆடம்பர பொருட்களுக்கு வரி அதிகமாகவும் இருக்கும். இந்த வரி முறை மூலம் வர்த்தகர்கள் தொழில்செய்பவர்களை அதிகாரிகள் தொந்தரவு செய்வது முடிவுக்கு வரும்.  உணவுப்பொருட்களுக்கு வரி விதிக்கப்படவில்லை. அதேசமயம், மற்றபொருட்கள் அனைத்தும் குறைந்தபட்ச வரிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி.யில் 5% 12% 18% 28% என நான்கு அடுக்குகளாக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மசோதா ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜி.எஸ்.டி.யின் 4 துணை மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாக்கள் மீது இன்று விவாதம் நடத்தப்பட்டது. நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு திருத்தங்களுடன் கூடிய இந்த மசோதாக்கள் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 4 துணை மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.