human sacrifice:narabali:கேரளாவில் நரபலி அதிர்ச்சி!கழுத்தை அறுத்து 2 பெண்கள் படுகொலை : பெண் உள்பட 3 பேர் கைது
கேரள மாநிலம் திருவல்லாவில் இரு பெண்கள் கழுத்தை அறுத்து நரபலி கொடுக்கப்பட்ட கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக ஒரு பெண் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவல்லாவில் இரு பெண்கள் கழுத்தை அறுத்து நரபலி கொடுக்கப்பட்ட கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக ஒரு பெண் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சொத்து, பணம், செல்வச்செழிப்பு போன்ற காரணங்களுக்காக இதுவரை கேரளாவில் நரபலி சம்பவம் நடந்தது இல்லை, டெல்லியில் இதுபோன்று நடந்துள்ளது. படித்தவர்கள் அதிகம் வாழும், அறிவார்ந்த சமூகத்தினர் இருக்கும் கேரளாவில் நடப்பது இதுதான் முதல்முறை.
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகிறார் டிஒய் சந்திரசூட்:யுயு லலித் பரிந்துரை
இந்த சம்பவம் குறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:
கடவந்தராவில் ஒரு பெண்ணையும், காலடியைச் சேர்ந்த ஒரு பெண்ணையும் திருவல்லா நகருக்கு அழைத்து வந்து கொடூரமாக நரபலி தரப்பட்டுள்ளது. இந்த நரபலியில் திருவல்லாவைச் சேர்ந்த பாகவல் சிங், இவரின் மனைவியும் பெரம்பாவூரைச் சேர்ந்த லைலா, பெரம்பாவூரைச் சேர்ந்த ஷபி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
செழிப்பாகவும், செல்வத்துடனும் இருப்பதற்காக இந்த நரபலி கொடுக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நரபலி கொடுக்கப்பட்ட இரு பெண்களும் சமீபத்தில் காணாமல் போயுள்ளனர், இருவரின் உறவினர்களும் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.நரபலி கொடுக்கப்பட்ட நிலையில் இரு பெண்களின் உடலும் புதைக்கப்பட்டது. இதில் ஒரு பெண் உடல் மட்டும் அடையாளம் காணப்பட்டு எடுக்கப்பட்டது.
தொழிலதிபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் மோசடி - மேற்கு வங்க கும்பல் கைவரிசை
காலடியைச் சேர்ந்த ஒரு பெண் பத்தினம்திட்டாவுக்கு வேறுஒரு காரணத்துக்காக நரபலி ஏஜென்ட் அழைத்து வந்துள்ளார். பேஸ்புக்கில் போலிக் கணக்கு தொடங்கிய நரபலி ஏஜென்ட் பகவத்தை முதன்முதலாக திருவல்லாவில் சந்தித்துப் பேசியுள்ளார். தான் பெரம்பாவூரைச் சேர்ந்தவர் என்று கூறி அறிமுகம் செய்து, நரபலி பற்றி பேசியுள்ளார்.
அதன்பின் காலடியைச் சேர்ந்த பெண்ணை திருவல்லாவுக்கு அழைத்துச் சென்று அவரை நரபலி கொடுத்துள்ளனர். கடைசியாக அந்த பெண்ணின் மொபைல் டவர் திருவல்லாவில் முடிந்துள்ளது.
கடந்த மாதம் 27ம் தேதி பொன்னுருன்னியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் கடவந்தராவில் இருந்து திருவல்லாவுக்குச் சென்று காணாமல் போயுள்ளார். அவரின் மொபைல் போன் டவரும் திருவல்லாவில் துண்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கொச்சி நகர போலீஸ் ஆணையர் நாகராஜூ சக்கிலம் கூறுகையில் “ காலடி, கடவந்தரா பகுதியைச் சேர்ந்த இரு பெண்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து காணவில்லை. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் திருவல்லாவில் இருவரின் மொபைல் போன் டவரும் துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் இரு பெண்களும் நரபலி கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது
உஜ்ஜைன் மகா காளேஸ்வர் கோயில் புனரமைப்பு நிறைவு: நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
இது தொடர்பாக நரபலி ஏஜென்ட் ஷபி, ஆயுர்வேத மருத்துவர் பகவல் சிங், அவரின் மனைவி லைலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முதல் நரபலி ஜூன் மாதம் தரப்பட்டுள்ளது, 2வது நரபலி செப்டம்பர் மாதம் தரப்பட்டுள்ளது. விசாரணையில் மருத்துவர் பகவல் சிங் கடனில் மிகுந்த சிரமப்பட்டுள்ளார். அப்போது, போலி பேஸ்புக் மூலம், ஷபி அறிமுகமாகி, இருவரும் சந்தித்துப் பேசியுள்ளார்.
அப்போது, தனக்கும் இதுபோன்று பணச்சிக்கல் இருந்தது, ஆனால் நரபலி கொடுத்தபின் அவை தீர்ந்துவிட்டது என ஷபி, பகவல் சிங்கிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இரு பெண்களும் பண ஆசை வார்த்தை கூறி அழைத்துவரப்பட்டு கழுத்தை அறுத்து நரபலி கொடுக்கப்பட்டனர்.
இந்த நரபலி குறித்து முழுமையாக விசாரணை முடியவில்லை, இதில் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த வழக்கில் ஷபிதான் நரபலிக்கு மூளையாகச் செயல்பட்டுள்ளார். போலிபேஸ்புக் உருவாக்கி, பகவல் சிங்கின் மனதை மாற்றி நரபலியில் ஈடுபடவைத்துள்ளார்” எனத் தெரிவித்தார்