Asianet News TamilAsianet News Tamil

IAF Chopper Crash: ஹெலிகாப்டர் விபத்து.. 80 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த வருண் சிங் உயிரிழப்பு.!

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் 80 சதவீத தீக்காயங்களுடன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

group captain Varun Singh passing away
Author
Bangalore, First Published Dec 15, 2021, 1:13 PM IST

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் 80 சதவீத தீக்காயங்களுடன் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் வருண்சிங் 80 சதவீத தீக்காயங்களுடன் படுகாயம் அடைந்தார். 

group captain Varun Singh passing away

இதனையடுத்து, குன்னூர் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை பெற்று வந்தது. இதனையடுத்து, மேல்சிகிச்சைக்காக பெங்களூரு கமாண்டோ மருத்துவமனைக்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் கேப்டன் வருண் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தாலும், சீராக உள்ளது  என இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.  உயிர் காக்கும் கருவிகளுடன் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை காப்பாற்றும் நோக்கிலே  மருத்துவர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். 

 

 

இந்த பிழைக்க வைக்கும் பட்சத்தில் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி பெங்களூரு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. வருண் சிங் உயிரிழந்தது தொடர்பான தகவலை இந்திய விமானப்படை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios