Grenade attack on Srinagar police station one killed four injured

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் காவல்நிலையம் மீது கையெறி குண்டு வீசப்பட்டதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்புத் தீவிரவாதி புர்ஹான்வானி சுட்டுக் கொல்லப்பட்டது முதல் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்படும் தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளன. ராணுவ முகாம்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது தினசரி செய்திகளாகவே மாறிவிட்டன. மத்திய அரசுக்கு எதிராக பிரிவினைவாதிகளும் அவ்வப்போது கடையடைப்பு மற்றும் கல்வீச்சிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று மட்டும் இரண்டு இடங்களில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் நடைபெற்ற சில மணித்துளிகளில் ஸ்ரீநகரில் உள்ள காவல்நிலையம் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.