Asianet News TamilAsianet News Tamil

ஆபிஸ் நேரத்தில் ஓபி அடிப்பவர்களுக்கு வருகிறது ஆப்பு! எப்படி தெரியுமா?

GPS to track government employees
GPS to track government employees
Author
First Published Feb 3, 2018, 11:19 AM IST


அரசாங்க ஊழியர்களைக் கண்காணிக்க ஜி.பி.எஸ். முறை கொண்டுவரப்பட உள்ளது.

அரசு அலுவல் நேரத்தில், ஆலோசனைக் கூட்டம், சைட் விசிட் என்று கூறிவிட்டு பணிகளை புறக்கணித்து செல்லும் ஊழியர்களை, ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. பயோமெட்ரிக் வருகை பதிவேட்டுடன் ஜி.பி.எஸ். முறையும் இணைக்கப்படுவதால், அரசு அதிகாரிகள் பணியில் இருக்கிறார்களா? இல்லையா? என்பதை துல்லியமாக கண்டறியும் வகையில் இந்த முறையை அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு, அரசு ஊழியர்களின் வருகைப் பதிவை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யும் முறை தேசிய தகவல் மையத்தால் செய்யப்பட்டு வருகிறது- இதன் அடுத்தகட்டமாக ஜி.பி.எஸ். கருவிகளை இணைக்கும் வசதியும், கொண்டுவரப்பட உள்ளது. அலுவலக நேரத்தில் ஆலோசனைக் கூட்டம், சைட் விசிட் என்று கூறிவிட்டு வெளியே செல்லும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் உண்மையிலேயே பணியிடத்தில்தான் உள்ளார்களா என்பதை துல்லியமாக கண்டறிவதற்காக இந்த வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் இது பொருத்தப்பட உள்ளது.

அரசு அதிகாரிகள் சைட் விசிட்டிங்கிற்காக வெளியூர் செல்லும்போதோ, ஆலோசனைக் கூட்டங்களுக்கு செல்லும்போதோ நாள் முழுவதும் வேலைக்கு வராமல் இருப்பது அல்லது தாமதமாக அலுவலகம் வருவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ஆனாலும், சைட் விசிட்டிங்கிலும், ஆலோசனைக் கூட்டத்திலும் அதிக நேரம் செலவிடுவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

அதிகாரிகளின் இதுபோன்ற செயல்களைக் கண்காணிக்க, ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்டுபிடிக்கலாம் என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதுபோலவே, ரயில்வே ஊழியர்களுக்கும் இது தேவைப்படுவதாக ரயில்வே அமைச்சகம் கருதுகிறது. எனவே, ஜி.பி.எஸ். கருவி, வருகைப்பதிவேடு சோதனையை ரயில்வே துறை, சோதனை செய்ய முயன்று வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios