Asianet News TamilAsianet News Tamil

கோயில் அன்னதானம், பிரசாதத்துக்கு ஜி.எஸ்.டி.யா? மத்திய அரசு புதிய விளக்கம்...

Government says no GST on free food served at religious institutions
Government says no GST on free food served at religious institutions
Author
First Published Jul 12, 2017, 8:34 AM IST


கோயில், தர்ஹா, மசூதி, குருத்வாரா, தேவாலயம் ஆகியவற்றில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம், அன்னதானம் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

அதேபோல மதரீதியான நிறுவனங்கள் வழங்கும் பிரசாதம், அன்னதானத்துக்கும் ஜி.எஸ்.டி.வரி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்களில் வழங்கப்படும் பிரசாதம், அன்னதானத்துக்கும் ஜி.எஸ்.டி. வரிவிதிக்கப்படும் பரவலாக ஊகடகங்களில் செய்திகள்வெளியாகின. இதையடுத்து, மத்திய நிதி அமைச்சகம் நேற்று விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, “ கோயில், தேவாலயங்கள், தர்ஹாக்கள், மசூதிகள், குருதுவாராக்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில், மதநிறுவனங்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம், பிரசாதத்துக்கு ஜி.எஸ்.டி. வரி உண்டு என்று ஊடகங்களில் சில செய்தி வெளியிட்டன. இது உண்மையல்ல, இதற்கு ஜிஎஸ்டி வரி கிடையாது.

Government says no GST on free food served at religious institutions

அதேசமயம்,  பிரசாதம், அன்னதானத்துக்கு இடுபொருட்களான சர்க்கரை, சமையல் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் இப்பொருட்களை பிரசாதத்திற்காக அனுப்பும் சேவைக்கு ஜிஎஸ்டி உண்டு” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Follow Us:
Download App:
  • android
  • ios