உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பு ஏற்று 2 மாதங்களில் 803 கற்பழிப்புகள், 729 கொலைகள் நடந்துள்ளன என அரசு தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக யோகிஆதித்யநாத் பொறுப்பு வகித்து வருகிறார். இப்போது அங்கு பட்ஜெட்கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த கூட்டத்தில், சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.ஷைலேந்திர யாதவ் லலாய் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து கேள்விநேரத்தில், சட்டசபை விவகாரங்கள் துறை அமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா பதில் அளித்து பேசினார்.

அவர் கூறுகையில், “ பா.ஜனதா ஆட்சி பொறுப்பு ஏற்று அதாவது, கடந் மார்ச் 15ந்தேதி முதல் மே 9-ந்தேதி வரை மாநிலத்தில் 729 கொலைகள், 803 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்

கொலைக்குற்றங்களில் 67 சதவீதம் நடவடிக்கையும், கற்பழிப்பு குற்றங்களில் 71 சதவீத நடவடிக்கையும், கடத்தல் வழக்கில் 52 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 3 குற்றவாளிகள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும், 131 பேர் மீது குண்டர் சட்டமும், 126 பேர் கும்பல்தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றங்களைத் தடுக்க முதல்வர் ஆதித்யநாத் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி வருகிற௸ு. சிறிய குற்றங்களுக்கு கூட நீதிமன்ற உத்தரப்படி எப்.ஐ.ஆர். உடனுக்குடன்  பதிவு செய்யப்படுகிறது’’ என்று தெரிவித்தார்.