Asianet News TamilAsianet News Tamil

வெளிநாட்டினர் 2200 தப்லீக் ஜமாத் அமைப்பினர்... இந்தியாவுக்குள் 10 ஆண்டுகள் நுழைய அதிரடி தடை!

வெளிநாட்டிலிருந்து வந்த தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் விசா விதிமுறைகளை மீறியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டனர். சிலர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தப்லீக் ஜமாத் மாநாடு தொடர்புடைய 2,200-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் 10 ஆண்டுகள் இந்தியாவுக்குள் நுழைய  தடை விதிக்கப்பட்டுள்ளது.

Government banned 2200 forign Tapliq jamaths to enter India
Author
Delhi, First Published Jun 4, 2020, 8:16 PM IST

தப்லீக் ஜமாத் மாநாட்டுடன் தொடர்புடைய வெளிநாடுகளைச் சேர்ந்த 2,200 பேர் இந்தியாவுக்குள் நுழைய 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.Government banned 2200 forign Tapliq jamaths to enter India
கொரோனா வைரஸ் இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக தலைதூக்கிக் கொண்டிருந்தபோது, தலைநகர் டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் ஜமாத் மாநாடு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற பலரும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்றதாகக் கூறப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து வந்திருந்தவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் பரவியது. இந்த மாநாட்டில் பங்கேற்று சென்றவர்கள் மூலம் பல மாநிலங்களிலும் கொரோனா தொற்று பரவியதாக சர்ச்சை கிளம்பியது.

 Government banned 2200 forign Tapliq jamaths to enter India
டெல்லி மாநாடு ஒரு தொகுப்பாக நோய் பரவ காரணம் என்றும் புகார் கூறப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் விசா விதிமுறைகளை மீறியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டனர். சிலர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தப்லீக் ஜமாத் மாநாடு தொடர்புடைய 2,200-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் 10 ஆண்டுகள் இந்தியாவுக்குள் நுழைய  தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios