கடந்த 5 ஆண்டுகளில் அரசு வங்கிகள் ரூ.2.50 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளன என்று ரிசர்வ் வங்கி பகீர் அறிக்கை வௌியிட்டுள்ளது.

குறிப்பாக ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 27 அரசு வங்கிகளும் கடந்த 2016-17ம் நிதியாண்டில், ரூ.81 ஆயிரத்து 683 கோடி தள்ளுபடி செய்துள்ளன. இது கடந்த 5 ஆண்டுகளில் மிக அதிகமான தொகையாகும். கடந்த 2015-16ம்  நிதியாண்டில் தள்ளுபடி செய்த தொகையைக் காட்டிலும் 41 சதவீதம் அதிகமாகும்.

கடந்த 2016-17ம் ஆண்டில் ஸ்டேட் வங்கியும், தன் துணை வங்கிகளும் ரூ.27 ஆயிரத்து 574 கோடி தள்ளுபடி செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதில் கடந்த 2012-13ம் ஆண்டில் ரூ.27 ஆயிரத்து 231 கோடியும், 2015-16ம் ஆண்டில் ரூ.57 ஆயிரத்து 586 கோடியாக உயர்ந்துள்ளது. 2016-17ம் ஆண்டில் இது ரூ.81 ஆயிரத்து 683 கோடியாக அதிகரித்தது.

கட்த 2013-14ம் ஆண்டில் ரூ.34 ஆயிரத்து 409 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்,  அடுத்த நிதியாண்டில் இது ரூ.49 ஆயிரத்து 18 கோடியாக அதிகரித்தது. ஒட்டுமொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் அதாவது 2017 மார்ச் மாதம் வர செய்யப்பட்ட கடன் தள்ளுபடி ரூ. 2 லட்சத்து 49 ஆயிரத்து 927 கோடியாகும்.

இதில் பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா வங்கி ரூ.4 ஆயிரத்து 348 கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளது, கார்ப்பரேஷன் வங்கி ரூ.3 ஆயிரத்து 574 கோடியும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ.3 ஆயிரத்து 66 கோடியும், ஐ.டி.பி.ஐ. வங்கி ரூ.2 ஆயிரத்து 868 கோடி கடனை தள்ளுபடி ெசய்துள்ளன.