துணை ஜனாதிபதி தேர்தலுக்காக எதிர்கட்சி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கோபால கிருஷ்ண காந்தி ஜூலை 18 ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளார்.

துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிகாலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது.

இதனால் அடுத்த துணை ஜனாதிபதியின் தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.  இதையடுத்து எதிர்கட்சிகளின் சார்பில் காந்தியின் பேரனாகிய கோபால கிருஷ்ண காந்தியை வேட்பாளராக காங்கிரஸ் தலைமை நிறுத்தியுள்ளது.

இதைதொடர்ந்து திமுகவிடமும் அதிமுகவிடமும் கோபால கிருஷ்ண காந்தி ஆதரவு கோரியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக எடப்பாடிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் அவர் எழுதிய கடிதத்தில், காந்தி, நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, உள்ளிட்ட தலைவர்களின் கனவை நனவாக்க வேண்டும் என்று நம்பிக்கை கொண்டவர்கள் அரசியல் கட்சிகளையும் தாண்டி தன்னை ஆதரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை ஜூலை 18 ஆம் தேதி கோபால கிருஷ்ண காந்தி  தாக்கல் செய்ய உள்ளார்.