துணை குடியரசு தலைவர் வேட்பாளர்கள் வெங்கையா நாயுடு, கோபாலகிருஷ்ண காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். துணை குடியரசு தலைவர் அமீத் அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

புதிய துணை குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் சார்பில் காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி, துணை குடியரசு தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல், பாஜக கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடுவும், துணை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

துணை குடியரசு தலைவர் வேட்பாளருக்கான வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளான இன்று, இன்று காலை சுமார் 11 மணியளவில் துணை குடியரசு தலைவருக்கான வேட்புமனுவை, வெங்கய்யா நாயுடு தாக்கல் செய்தார்.

இதையடுத்து, எதிர்கட்சி துணை குடியரசு தலைவர் வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தியும் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சரத்யாதவ் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

துணை குடியரசு தலைவர் வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி, மிகச் சிறந்த மனிதர் என்றும் சிறந்த நிர்வாகி என்றும் எதிர்கட்சிகள் கூறி வருகின்றன.