ஆணையத்தின் உதவி எண்ணை ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில் சேவ் செய்ததற்கு கூகிள் நிறுவனம் பொறுப்பு ஏற்று உள்ளது.

ஆதார் எண் பாதுகாப்பானது அல்ல என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்த  நிலையில், ஆதார் ஆணையத்தின் தலைவர் ஆர். எஸ்.சர்மா தனது ஆதார் எண்ணை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு. "என்னுடைய ஆதார் எண் இது தான்.. இதை வைத்துக்கொண்டு என்ன கெடுதல் செய்ய  முடியும். எதாவது ஒரு விதத்தில் நிரூபிக்க முடியுமா..? என்று சவால் விடுத்து இருந்தார் .

இவருடைய இந்த சவாலை பிரான்ஸ் நாட்டு இணைய பாதுகாப்பு வல்லுநரான எலியட் அல்டர்சன் ஏற்றுக்கொண்டு, சர்மா குறிப்பிட்ட ஆதார் எண்ணை வைத்துக்கொண்டு, அதனுடன் இணைக்கப்பட்ட  மொபைல் எண் மற்றும் பான் என்னை வெளியிட்டு இருந்தார் அல்டர்சன்

இந்நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் ஆண்ட்ராய்டு போனில் ஆதார் உதவி எண் UIDAI 180013001947 என்ற  பெயரில் பதிவாகி உள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அவர் சொன்னபடியே, மொபைலை சோதித்து பார்க்கும் போது,

UIDAI எண் பதிவாகி உள்ளதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து இதற்கு விளக்கம் அளித்துள்ள ஆதார் ஆணையம், "தாங்கள்எந்த தொலைத்தொடர்பு  நிறுவனத்தையோ அல்லது தயாரிப்பு நிறுவனத்தையோ ஆதார் உதவி எண்ணை சேவ் செய்ய சொல்லி  கேட்கவில்லை. அதற்கும் ஆணையத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்து இருந்தது.

பின்னர், கூகிள் தான் இந்த எண்ணை மொபைல்களில் தானாகவே பதிவு செய்து உள்ளது என ட்வீட் செய்து இருந்தார் எலியட்.

அதன் பின், இதற்கு பொறுப்பேற்று பதில் அளித்துள்ள கூகிள் நிறுவனம் இந்திய மொபைல் நிறுவனங்களுக்கு, கடந்த 2014 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஆண்ட்ராய்ட் வெர்ஷனில், 112 என்ற உதவி எண்ணைச் சேர்க்கும் போது, ஆதார் உதவி எண்ணையும சேர்ந்து விட்டதாக வருத்தம் தெரிவித்து உள்ளது.