மத்தியப்பிரதேச மாநிலத்தில் நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால், அப்பாதையில் ரயில் போக்குவரத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த ரயில் மஜோலி என்ற இடத்தில் ரயில் நிலையத்தை கடந்தபோது, திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இதில், சரக்கு ரயிலின் 31 வேகன்கள் தலைகீழாக கவிழ்ந்தன. எனினும், இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. விபத்துக் காரணமாக இப்பாதையில் ரயில் போக்குவரத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது. மீட்புப் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.
