அபுதாபுயில் வாடகைக் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த ஜிஜேஷ் என்பவருக்கு அந்நாட்டு லாட்டரி சீட்டால் 41 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜிஜேஷ் கொரோத்தன். இவர் தனது குடும்பத்தோடு பிழைப்புக்காக அபுதாபி சென்று அங்கே வாடகைக் கார் ஓட்டுனராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக ஓட்டுனராக பணியாற்றி வரும் அவர் கொரோனா பாதிப்பால் கடந்த சில நாட்களாக எந்த வேலையும் இல்லாமல் வருவாயும் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில்  அவர் ஒரே நாளில் 40 கோடி ரூபாய்க்கு அதிபதியாகி விட்டார்.

ஜிஜேஷ் அரபு எமிரேட்ஸின் மாதாந்திர அபுதாபி ‘பிக் டிக்கெட் லாட்டரி’ சீட்டை வாங்கியுள்ளார். இதற்கான குலுக்கல் கடந்த 3 ஆம் தேதி கொரோனா காரணமாக இணையத்தில் நடந்துள்ளது. அதைக் குடும்பத்தோடு அமர்ந்து பார்த்தவருக்கு இன்ப அதிர்ச்சி. குலுக்கலில் அவரது லாட்டரி எண்ணான 041779 க்கு 20 மில்லியன் த்ராம்ஸ் அதாவது இந்திய மதிப்பில் 41 கோடி ரூபாய் பரிசாக விழுந்துள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் அவர் 40 கோடிக்கு அதிபதியாகியுள்ளார்.