Asianet News TamilAsianet News Tamil

பெங்களூரு - சென்னை வரை இனி 23 நிமிடங்கள்தான்.... அறிமுகமாகிறது ‘ஹைபர்லூப்’ அதிவேக வாகனம்

Going from Chennai to Bangalore is going to be the next time you go to the grocery store on the home side.
Going from Chennai to Bangalore is going to be the next time you go to the grocery store on the home side.
Author
First Published Nov 17, 2017, 9:29 PM IST


பெங்களூரில் இருந்து சென்னைக்கு செல்வது என்பது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்றுவிட்டு வரும் நேரம் போல இனிமேல் ஆகப்போகிறது.

அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கும் ‘விர்ஜன் ஹைபர்லூப்’ போக்குவரத்தை கர்நாடகாவில் கொண்டுவர முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு முடிவு செய்து அதற்கான பணிகளில் தீவரமாக இறங்கியுள்ளது.

மணிக்கு 650 கி.மீ வேகத்தில், விமானத்தைக் காட்டிலும் வேகமாகச் செல்லும் இந்த ஹைபர் லூப் வாகனத்தில் 50 பயணிகள் வரை பயணிக்கலாம். பெங்களூரு முதல் சென்னைக்கு வெறும் 23 நிமிடங்களில் சென்றுவிடலாம்.

ஹைபர் லூப் என்றால் என்ன?

‘ஹைபர் லூப்’ வாகனம் என்பது, மெட்ரோ ரெயில் போன்று ஒரு பெட்டி கொண்டதாக இருக்கும். ரெயில்வே தண்டாவளத்தில் செல்லாமல், காந்த ஈர்ப்புவிசையில் ஒரு மூடப்பட்ட குழாய்க்குள், குறைந்த அழுத்தத்தில் செல்லும்.

செலவு அதிகமாக இருக்குமா?
ஹைபர் லூப் வாகனம் மக்களின் பயன்பாட்டுக்காக கொண்டுவர இருப்பதால், சாதாரண பஸ் கட்டணம் போலவே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஹைபர்லூப் நிறுவனம் உலகளவில் ஐக்கியஅரபுநாடு, பின்லாந்து, டென்மார்க், கனடா, மெக்சிக்கோ, அமெரிக்காவின் மாநிலங்களான கொலராடோ, டெக்சாஸ், மிசோரி, புளோரிடா ஆகியவற்றுடன் பேசி வருகிறது. 

இந்தியாவில் மஹாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடக அரசுடன் ஹைபர் லூப் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தில் உள்நாட்டு நிறுவனங்கள் உதவியுடன் இந்த ஹைபர்லூப் பெட்டிகள் செய்யப்பட உள்ளன.  பெங்களூரு-சென்னை, ஒசூர், தும்கூரு ஆகிய நகரங்களுக்கு இடையே போக்குவர்து செயல்படுத்தப்பட உள்ளது. 

வேகம் எவ்வளவு?
ஹைபர் லூப் வாகனம் மணிக்கு அதிகபட்சமாக 630 கி.மீ வேகக்திலும், அரை மணிநேரத்தில் 300 கி.மீ கடக்க முடியும். 

குறைந்தபட்சம், அதிகபட்சம்?
ஹைபர் லூப் வாகனம் மூலம் குறைந்தபட்சமாக 20 கி.மீ வரை இயக்கவும், அதிகபட்சமாக 1000கி.மீ வரையிலும் இயக்க முடியும். வாகனம் இயக்கப்பட்டால், இடையே எந்த நிறுத்தங்களும் இருக்காது. ஹைபர் லூப் போக்குவரத்து இயக்கப்பட்டால், அதற்குரிய கட்டணம், சாதாரண பஸ் கட்டணம் போல் இருக்கும் என்று கர்நாடக அரசு தரப்பிலும், ஹைபர்லூப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போக்குவரத்து எப்போது?
ஹைபர் லூப் நிறுவனம் தனது  முதல் வர்த்தகசேவையை துபாயில் 2023ம் ஆண்டு தொடங்குகிறது. 

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஹைபர் லூப் போக்குவரத்து சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்ய ஹைபர் லூப் நிறுவனத்தின் அதிகாரி ரிச்சார்டு பிரான்சன், கர்நாடக நகர மேம்பாட்டுதுறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 6 வாரங்களில் இந்த ஆய்வு செய்து முடிக்கப்பட்டும். இந்த திட்டம் சாத்தியாகும் பட்சத்தில் இதற்கான நிதியுதவி ஒதுக்கப் முடிவு செய்யப்படும் என்று கர்நாடக தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios