ஆந்திராவின் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிப்பட்டணம் அருகே கோதவரி ஆற்றில் 60-க்கும் மேற்பட்டோரை ஏற்றி சென்ற சுற்றுலா படகு
சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, ஆற்றின் மையப்பகுதிக்கு சென்ற போது பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. இதில், பயணித்தவர்கள் பாதுகாப்பு உபகரணங்கள்  இல்லாதால் பலர் 60 தண்ணீரில் மூழ்கினர்.

இதில், 25 பேர் நீந்தி கரையை வந்தடைந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கினர். இது தொடர்பாக உடனே தேசிய
பேரிடம் மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் குழுவினர் நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

படகில் பயணித்த 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் மாவட்ட நிர்வாகத்தினர் இறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.