Goa Election Results 2022 : பாஜக 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
40 தொகுதிகளை கொண்ட கோவாவில் 11.6 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 17, பாரதிய ஜனதா 13 இடங்களில் வெற்றி பெற்றன. காங்கிரஸ் 28.4 சதவீத வாக்குகளும், பாரதிய ஜனதா 32.5 சதவீத வாக்குகளும் பெற்று இருந்தன. எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவியதால் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது.

பா.ஜ.க. ஆட்சி மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக கோவா மாநிலத்தில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 2017-ம் ஆண்டு தேர்தலின் போது வேலை தருவதாக சொல்லி பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது.

தற்போதைய நிலவரப்படி, கோவாவில் பாஜக 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் 3 இடத்தில் முன்னிலையில் உள்ளது. இதர கட்சிகள் 3 இடத்தில் முன்னிலையில் உள்ளன.
