ஆண் வாரிசை போலவே பெண் பிள்ளைகளுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

தமிழகத்தில் 1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் 2005ம் ஆண்டு இந்தியா முழுவதும் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை அளிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இல்லை என்றும், இந்த சட்டம் 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்டதால் அதற்கு முன்பு பிறந்த பெண்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில், பெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்குவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், சொத்தைப் பிரித்து பங்கு வழங்கும்போது ஆண் பிள்ளைகளைப் போலவே பெண்களுக்கும் சம பங்கு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பெற்றோருக்கு ஒரு முறை மகள் தான் என்றாலும், வாழ்நாள் முழுவதும் மகள் தான். 2005-ஆம் ஆண்டு இந்து வாரிசு உரிமை சட்டம் தொடர்பான வழக்கில் இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.